பறக்கும் படையிடம் சேலையை கழற்றி கீழ்த்தரமாக நடந்து கொண்ட தினகரன் மகளிரணி! (வீடியோ இணைப்பு)

வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (13:31 IST)
ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் அணியினர் பணத்தை வாரியிறைப்பதாக புகார்கள் வந்தவாறு உள்ளன. ஒரு ஓட்டுக்கு குறைந்தபட்சம் 4000 ரூபாய் வரை வழங்கப்படுவதாக வீடியோ ஆதரங்களுடன் செய்திகள் வருகிறது.


 
 
ஆனால் இதனை தினகரன் தரப்பு முற்றிலுமாக மறுக்கின்றனர். தோல்வி பயத்தால் எதிர் தரப்பினர் பொய் குற்றச்சாட்டுகளை வைப்பதாக தினகரன் கூறுகிறார். இதனால் தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் தொகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் வீடுகளில் பறக்கும் படை மூலம் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது தேர்தல் ஆணையம்.
 
இந்நிலையில் ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பறக்கும் படையினருக்கு கிடைத்ததையடுத்து அந்த வீட்டை துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் முற்றுகையிட்டனர்.

 

 
 
ஆனால் அங்கிருந்த தினகரன் மகளிர் அணியை சேர்ந்த 4 பெண்கள் அவர்களை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எங்கடா பணம் இருக்குனு செக் பன்ன வந்தீங்கன்னு ஒருமையில் பேசிய ஒரு பெண் கேமராவை ஆஃப் செய்ய வலியுறுத்தினார்.
 
அப்போது திடீரென கேமராவை ஆஃப் பன்ன சொன்ன அந்த வடிவேலு படத்தின் காமெடி பாணியில் தனது ஆடையை கழற்றி போட்டு இப்போ செக் பன்னுடா என மிகவும் தரம் தாழ்ந்து அநாகரிகமாக நடந்து கொண்டார். இதனையடுத்து கேமரா வேறு இடத்துக்கு உடனடியாக திருப்பப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்