ஆர்.கே.நகர் தொகுதியில் நமது வேட்பாளரை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கழகத்தினர் வெற்றி பெற செய்ய வேண்டும். பத்து, பதினைந்து திமுக எம்.எல்.ஏக்கள் எங்களை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். அவர்கள் விரைவில் அதிமுகவில் இணைவார்கள். அடுத்தவர் வீட்டில் திமுக திருடப்பார்க்கிறது - ஆனால், உங்கள் (திமுக) வீட்டு பொருளை இழக்க போகிறீர்கள் என்பதை திமுக பின்னர் தெரிந்துகொள்ளும்.