தினகரனின் திடீர் உண்ணாவிரத அறிவிப்பு! காரணம் என்ன தெரியுமா?

சனி, 17 மார்ச் 2018 (21:11 IST)
சமீபத்தில் 'அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்' என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள டிடிவி தினகரன் தனது முதல் போராட்டமாக மார்ச் 25ஆம் தேதி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தனது கட்சியின் சார்பில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆளும் அதிமுக, மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் கொடுத்து வரும் நிலையில் தற்போது டிடிவி தினகரன் உண்ணாவிரதம் போராட்டத்தை அறிவித்துள்ளார்,.

இந்த போராட்டம்  மார்ச் 25-ம் தேதி தஞ்சையில் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெறும் என்றும் இந்த போராட்டத்தில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் கட்சி தலைமை அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்