நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

Siva

ஞாயிறு, 20 ஜூலை 2025 (09:59 IST)
பரபரப்பான சூழ்நிலையில் நாளை  நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் பல்வேறு முக்கிய பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
எதிர்க்கட்சிகளின் முக்கியப் பிரச்சினைகள்:
 
இந்தியா - பாகிஸ்தான் போர்: "நான் தான் நிறுத்தினேன்" என்று டிரம்ப் கூறிய சர்ச்சைக்குரிய பேச்சு.
 
வங்க மொழி பேசுபவர்கள் வெளியேற்றம்: வங்க மொழி பேசும் மக்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவதை கண்டித்து.
 
பீகார் தேர்தல் பிரச்சனைகள்: பீகார் தேர்தல் தொடர்பான பிரச்சினைகள்.
 
ஆபரேஷன் சிந்து விவகாரம்: இந்த விவகாரம் குறித்தும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
அகமதாபாத் விமான விபத்து.
 
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி.
 
இந்த நிலையில், சில புதிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில் முக்கியமாக,
 
தேசிய விளையாட்டு நிர்வாக சட்ட மசோதா.
 
புவியியல் பாரம்பரிய தளங்கள் மற்றும் புதைபடிமங்கள் சட்ட மசோதா.
 
சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் சட்ட திருத்த மசோதா.
 
தேசிய ஊக்க மருந்து தடுப்பு சட்ட திருத்த மசோதா.
ஆகியவை அடங்கும்.
 
மேலும், மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீடிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலையும் அரசு பெற உள்ளதாகக் கூறப்படுகிறது.
 
எனவே, இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்