நீரிழிவு நோய் உள்ள நபர்கள் நீரிழிவினால் ஏற்படும் பாத தொற்று காரணமாக வரும் சிக்கல்களை தடுப்பது குறித்தான விழிப்புணர்வு கல்வியை இந்தியாவில் முதன் முறையாக சென்னை ராயபுரத்தில் எம்.வி.டயாபடீஸ் தொடங்கியுள்ளது.
நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் உலகளவில் புகழ் பெற்றிருக்கும் எம்.வி. டயாபடீஸ் மற்றும் யுஎஸ்ஏ–ஐ என்ற மருத்துவர்கள் அமைப்பு இணைந்து டயாபெட்டிக், ஃபுட் ரீசர்ச் இந்தியா என்ற பெயரின் கீழ் இந்தியாவில் முதன் முறையாக பாத மருத்துவத்திற்கான பள்ளியை சென்னை ராயபுரத்தில் தொடங்க உள்ளனர்.
இந்த எம்.வி. டயாபடீஸ் மருத்துவமனையில் நீரிழிவு பாத சிகிச்சை தொடர்பான அனைத்து பணிகள் மற்றும் நக பராமரிப்பு போன்ற பாத மருத்துவத்தின் அடிப்படை அம்சங்களில் மருத்துவர்களுக்கும் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கும் பயிற்சியளிக்க உள்ளது.
இது குறித்து எம்.வி. டயாபடீஸ் தலைமை மருத்துவர் டாக்டர். விஜய் விஸ்வநாதன் தெரிவித்ததாவது.....
நீரிழிவுடன் வாழ்கின்ற நபர்களது பாதங்களை எப்படி கவனமாகப் பராமரித்து பேண வேண்டும் என்பது தான் இப் பள்ளியின் முக்கிய நோக்கம்.
அது மட்டுமின்றி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவரின் கால் விரல்களை வெட்டாமல் எப்படி தவிர்ப்பது என்பது குறித்து கல்வியையும், பாத மருத்துவத்திற்கான பள்ளியின் முதன்மை இலக்காக இருக்கும்.
இப்பள்ளியில் இணைந்து கற்கும் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கு அதிக இட வாய்ப்புள்ள பாதங்களை பரிசோதிக்கும் சரியான முறை கற்பிக்கப்படும்.
மேலும் அறுவை சிகிச்சை அரங்கில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை முறையை நேரடியாகப் பார்த்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த கல்விக்கான பயிற்சி மற்றும் முதல் செயல் திட்டமானது ராயபுரம் எம்.வி. டயாபடீஸ் மருத்துவமனை வளாகத்தில், அக்டோபர் 23 முதல் 25-ம் தேதி வரை நடை பெற உள்ளது.
நியூயார்க் கல்லூரியின் துணை பேராசிரியர் டாக்டர். ஆண்டனி ஐரியோ