தருமபுரி அருகே சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம் போல வாகனங்கள் சென்று கொண்டிருந்துள்ளன. தோப்பூர் கணவாய் அருகே வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மிக வேகமாக வந்த சிமெண்ட் லாரி கட்டுக்கடங்காமல் முன்னாள் சென்ற வாகனங்களை மோதி நசுக்கி சென்றது. இதனால் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், 12 கார்கள், இரண்டு மினிவேன், ஒரு மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்தில் தப்பிய லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் அவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அடிக்கடி விபத்துகள் நடைபெறும் தோப்பூர் கணவாய் பகுதியை சீரமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.