புதிய காரில் முதலில் மனைவியை ஏற்றிச்சென்ற மகன்: விரக்தியில் தாய் தூக்கு

செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (12:43 IST)
ஆவடி அருகே புதிய காரில் மகன் ஏற்றிச்செல்லாத விரக்தியில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
 
ஆவடியைச் சேர்ந்த  சிவசுப்ரமணியன் சில நாட்களுக்கு முன்பு புதிய கார் வாங்கியுள்ளார். அந்த காரில் தன்னுடைய மனைவியை முதலில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். இதனிடையே, அவருடைய தாய், தந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து சிவசுப்ரமணியன் வருகிறார். தனது மகன் புதிய காரில் தன்னை முதலில் ஏற்றி செல்லவில்லையே என்ற ஏக்கத்துடனும் கோபத்துடனும் தாய் குமதம் வீட்டில் இருந்துள்ளார். 

சென்னை முழுவதும் சுற்றி விட்டு நேற்று இரவு வீட்டிற்கு வந்துள்ளனர். இதுகுறித்து மகனிடம் நேற்று இரவு குமுதம் கேட்டுள்ளார். அதற்கு மகன் சரியாக பதில் அளிக்கவில்லை. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த அவருடைய தாய் இன்று காலை யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்து வந்த ஆவடி போலீசார் தாய் குமுதம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து மகனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்