துணை முதல்வர் பதவி பவன் கல்யாணுக்கு பறிபோகிறதா? ஆந்திர அரசியலில் பரபரப்பு..!

Mahendran

திங்கள், 20 ஜனவரி 2025 (11:57 IST)
பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தில் துணை முதல்வராக செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவி பறிபோக வாய்ப்பிருப்பதாகவும் சந்திரபாபு நாயுடுவின் மகன் துணை முதல்வராக பதவியேற்க இருப்பதாகவும் கூறப்படுவது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதல்வர் பதவியையும் பவன் கல்யாண் துணை முதல்வர் பதவியையும் ஏற்றனர்.  சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் என்பவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

 இந்த நிலையில் அமைச்சராக இருக்கும் நாரா லோகேஷ்-க்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று  அவரது கட்சியில் உள்ள பல உறுப்பினர்கள் சந்திரபாபு நாயுடு நாயுடு இடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. லோகேஷ் தான் மாநிலம் முழுவதும் நடைபயணமாக சென்று மக்களை சந்தித்தார் என்றும் அவர் தான் தேர்தல் வெற்றிக்கு பெருமளவு பாடுபட்டார் என்றும் அவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது துணை முதலமைச்சராக இருக்கும் பவன் கல்யாணுக்கு அவரது பதவி பறிபோக வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவ்வாறு துணை முதல்வர் பதவி பவன் கல்யாணிடம் இருந்து பறிக்கப்பட்டால் அவருக்கு கூடுதல் துறை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் பவன் கல்யாண் ரசிகர்கள், ஆதரவாளர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்