அரசை கண்டு பயந்து ஓடிய டெங்கு, வெள்ளம்; செல்லூர் ராஜூ பெருமிதம்

சனி, 11 நவம்பர் 2017 (16:19 IST)
டெங்கு மற்றும் வெள்ளம் போன்றவை அரசின் நடவடிக்ககளுக்குப் பயந்து ஓடிவிட்டன என அமைச்சர் செல்லூர் ராஜூ பெருமையாக கூறியுள்ளார்.


 

 
அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் விவகாரம் மூலம் தமிழகத்தில் பிரபலமானவர். அப்போது முதல் அவர் தெரிவிக்கும் கருத்துகள் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தும் இல்லை சமூக வலைதளங்களில் சிரிப்பு மீம்ஸாக வலம்வரும். இன்று மதுரையில் தேதிய அக்மார்க் உணவுப் பொருட்கள் காண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசியவர் கூறியதாவது:-
 
கடுகு, மஞ்சல், தேன், டீத்தூள், நெய் போன்ற பொருட்களில் செய்யப்படும் கலப்படத்தை கண்டறியவே இந்த கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. தரச்சான்று பெற்ற பொருட்களை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். கலப்படம் செய்யப்பட்ட பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அரசின் நடவடிக்கைகளின் காரணமாகவே டெங்கு, வெள்ளம் போன்றவை பயந்து ஓடிவிட்டன. அரசாங்கத்தை விட திமுக சிறப்பாக செயல்படுகிறது என மு.க.ஸ்டாலின் கூறுவது நகைச்சுவையாக உள்ளது. அரசின் நடவடிக்கையால் 200 ஏரிகளில் மழைநீர் சேகரிக்கப்பட்டுள்ளது என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்