அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலர் மீது தமிழக அரசு அவதூறாக பேசியதாக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் மீதான அவதூறு வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விளவங்கோடு காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி இன்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழக அரசு குறித்து அவதூறாக பேசினால் வழக்கு தொடரப்படும். அந்த வழக்குகளை கோர்ட்டில் தான் சந்திக்க வேண்டும். விஜயதாரணி மீது வழக்கு இருப்பதால், அவரது கோரிக்கையை பொது கோரிக்கையாக ஏற்க முடியாது என கூறினார்.
மேலும், இது குறித்து பேசிய சபாநாயகர் ப.தனபால், உறுப்பினர்கள் தங்களுக்கான நேரத்தில், ஆளுநர் உரை குறித்து மட்டுமே பேச வேண்டும். நீதிமன்ற விவகாரங்களை சட்டசபைக்கு கொண்டு வர வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.