ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபா, மதுசூதனன், தினகரன் என மூன்று பேரும் வெற்றிப் பெற கடுமையாக போட்டியில் ஈடுப்பட்டுள்ளனர். மறுபக்கம் திமுக அதிமுக-வை வீழ்த்தி வெற்றி பெற வேண்டும் என களமிறங்கி உள்ளது.
இவர்களை தொடர்ந்து மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, கங்கை அமரனை களமிறக்கி உள்ளது. தீபா முதன் முறையாக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை அவர் நேற்று தாக்கல் செய்தார். நாளை முதல் அவர் பிரச்சாரத்தை தொடங்குவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.