தீபா விரும்பும் 3 சின்னங்கள் - என்ன தெரியுமா?

திங்கள், 27 மார்ச் 2017 (12:33 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடும் தீபா தனக்கு விருப்பமாக 3 சின்னங்களை தேர்வு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. 


 

 
தினகரன் தொப்பி சின்னத்திலும், ஓ.பி.எஸ் அணி மது சூதனன் மின்கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இதில், அதே தொகுதியில் போட்டியிடும் தீபா எந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகிறார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது அதுபற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
திராட்சைக் கொத்து :  இரட்டை இலைகளுடன் திராட்சை தொங்குவது போல் உள்ள இந்த சின்னம், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை நினைவுபடுத்தும் என்பதால் இந்த சின்னத்தில் போட்டியிட தீபா விரும்புகிறார்.
 
பேனா : ஜெ.வின் சொத்துக்கள் எனக்கு தேவையில்லை. அவர் பயன்படுத்திய பேனா மட்டுமே தனக்கு போதும் என தீபா ஏற்கனவே கூறியிருந்தார். எனவே அதை நினைவு படுத்தும் வைகையில் பேனா சின்னம் அவரது லிஸ்டில் இருக்கிறது.
 
படகு : ஆர்.கே.நகர் தொகுதி மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். எனவே படகு சின்னத்தில் போட்டியிட்டால் அதிக வாக்குகளை பெறலாம் என தீபா கணக்குப் போடுவதாக தெரிகிறது. 
 
இந்த மூன்று சின்னத்தில் தீபா எதில் போட்டியிட உள்ளார் என்பது இன்று மாலை தெரிந்து விடும். இன்று மாலை 6 மணியளவில் தனது சின்னத்தை அறிமுகப்படுத்தி ஆர்.கே.நகர் தொகுதியில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார்.  

வெப்துனியாவைப் படிக்கவும்