தாயை அடக்கம் செய்ய பிச்சையெடுத்த மகன்கள்

வியாழன், 8 பிப்ரவரி 2018 (16:17 IST)
இறந்த தாயின் உடலை அடக்கம் செய்ய பணமில்லாமல் இரண்டு பிள்ளைகள் மருத்துவமனையில் பிச்சை எடுத்தது அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயா, இவரது கணவர் இறந்த நிலையில்,  தனது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வாழ்ந்து வந்தார்.
 
விஜயா மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரை தனது இரண்டு மகன்களும் கவனித்து வந்தனர்.
 
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி விஜயா, மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்ய உறவினர்கள் யாரும் வராத நிலையில், சிறுவர்கள் இரண்டு பேரும் தாயின் இறுதி சடங்கிற்காக பிச்சை எடுத்தார்கள்.
 
இந்த நிகழ்வானது மருத்துவமனையில் இருந்த பலரது கண்களை கலங்க வைத்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்