போயஸ் கார்டனில் தீபா: பாதுகாப்பு போலீசாரிடம் வாக்குவாதம்!

ஞாயிறு, 11 ஜூன் 2017 (11:28 IST)
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வீடான அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகிறார் அவரது அண்ணன் மகள் தீபா. இந்நிலையில் இன்று காலை அவர் அங்கு நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா இன்று காலை திடீரென சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வந்தார். அங்கு வந்து இந்து வீடு எனக்கு சொந்தமானது என உரிமை கோரினார். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீபாவை உள்ளே அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் தீபா.
 
தன்னை உள்ளே விடாமல் தினகரன் தரப்பினர் தடுப்பதாக தீபா தரப்பினர் புகார் கூறியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயஸ் கார்டனில் உள்ள தனது தம்பி தீபக் ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்த அழைத்ததின் பேரிலேயே தான் வந்ததாக தீபா கூறியுள்ளார்.
 
ஆனால் தீபாவை உள்ளே விட போலீசார் அனுமதிகாததால் தீபா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உள்ளே இருக்கும் தீபக்கை வர சொன்னால் நான் போய்விடுகிறேன் என தீபா கூறியுள்ளார். இதனையடுத்து தீபா ஆதரவாளர்கள் தினகரனுக்கு எதிராக புகார் கூற அங்கு பதற்றமான சூழல் உருவாகியது. இதனால் போலீஸ் பாதுகாப்பு அங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்