சசிகலாவை புறம்போக்கு என விளாசிய தீபா: ஆவேசத்தில் சசி ஆதரவாளர்கள்!

ஞாயிறு, 11 ஜூன் 2017 (13:08 IST)
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்ததை அடுத்து அவர் அங்கு தடுக்கப்பட்டதாகவும் தாக்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தீபா சசிகலாவை புறம்போக்கு என திட்டினார்.


 
 
இன்று காலை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு அவரது அண்ணன் மகள் தீபா சென்றார். அவரது தம்பி தீபக்கின் அழைப்பின் பேரிலேயே அவர் அங்கு சென்றுள்ளார். ஜெயலலிதாவின் படத்துக்கு மரியாதை செலுத்து அழைத்ததாக கூறப்படுகிறது.
 
ஆனால் தீபா அங்கு தடுக்கப்பட்டதாகவும், உள்ளே உள்ள பாதுகாவலர்களால் தான் அடித்து துறத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தீபக் சசிகலாவுடன் சேர்ந்து இந்த சதி செயலில் ஈடுபட்டதாக தீபா கூறினார்.
 
முன்னாள் முதல்வரும் தனது அத்தையுமான ஜெயலலிதாவை தமது சகோதரர் தீபக்கும் சசிகலாவும் சேர்ந்து பணத்துக்காக கொன்றுவிட்டதாக ஒரே போடாக போட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
மேலும் இந்த பேட்டியின் போது, புறம்போக்கு சசிகலாவுடன் சேர்ந்து என்னை திட்டமிட்டு வரவழைத்தது தீபக் தான். தற்போது என்னை தாக்கியதும் அவர்களது திட்டம் தான். போயஸ் கார்டனில் ஏதோ நடக்கிறது அதனால் தான் என்னை உள்ளே அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டை வைத்தார் தீபா.
 
தீபா சசிகலாவை புறம்போக்கு என திட்டியது சசிகலா ஆதரவாளர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அதிமுக வட்டாரத்தில் இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்