சென்னையில் தீபா பேரவையினர் நடுரோட்டில் ஒப்பாரி: ஏன் தெரியுமா?

வெள்ளி, 26 அக்டோபர் 2018 (22:42 IST)
சென்னை திருவொற்றியூரில் தீபா பேரவையினர் சாலையில் திடீரென ஒப்பாரி வைத்ததால் அந்த பகுதியில் பரபரப்பும் அதன் பின்னர் கலகலப்பும் ஏற்பட்டது.

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து திருவொற்றியூரில் இன்று தீபா பேரவையின் தொண்டர்கள் கூடி ஒப்பாரி வைத்தனர். பின்னர் ஒரு மாட்டு வண்டியில் ஒரு இருசக்கர வாகனத்தையும் சிலிண்டர் ஒன்றையும் ஏற்றி மத்திய, மாநில அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்தபோதெல்லாம் போராட்டம் நடத்தாமல் தற்போது விலை இறங்கி வரும்போது போராட்டம் நடத்தி காமெடி செய்து வருவதாக பொதுமக்கள், தீபா பேரவையினர் முன்னரே கமெண்ட் அடித்தனர்.

மேலும் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய பாபு என்பவர் மாட்டு வண்டியில் இருந்து கோஷமிட அவருக்கு ஆதரவாக ஒருவரும் கோஷமிடாமல் பேரவையின் கொடியை மட்டும் பிடித்து கொண்டு அமைதியாக சென்றதும் வித்தியாசமான போராட்டமாக பார்க்கப்பட்டது. மொத்தத்தில் இந்த ஒப்பாரி போராட்டம் மக்களிடையே வரவேற்பை பெறுவதற்கு பதில் கலகலப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்