40 தொகுதிகளிலும் தனித்து போட்டி: ஜெ.தீபா அதிரடி

வெள்ளி, 15 மார்ச் 2019 (07:46 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, தினகரன் அணி, சீமான் கட்சி, கமல் கட்சி ஆகிய ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ள நிலையில் தற்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கட்சியும் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தீபா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
வரும் 18.04.2019 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ள 40 நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள 18 சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஜெ.தீபா அணியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விருப்பமுள்ள கழக உடன்பிறப்புகள், வரும் 16.03.2019 சனிக்கிழமை மற்றும் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஏதாவது ஒரு தொகுதியில் தீபாவும் அவருடைய கணவர் மாதவனும் போட்டியிடுவார்கள் என அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்