வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து: பொதுமக்கள் அச்சம்!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (19:55 IST)
வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்து பயங்கர தீ விபத்து: பொதுமக்கள் அச்சம்!
சென்னை வடபழனியில் சிலிண்டர்கள் வெடித்து அடுத்தடுத்த வீடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை வடபழனியில் உள்ள அழகிரி நகர் என்ற பகுதியில் மூன்று மாடி கட்டடத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது தளங்களின் குடியிருப்புகள் உள்ளன 
 
இந்த நிலையில் மூன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் ஆட்கள் இல்லாத சமயத்தில் திடீரென அதிக சத்தத்தோடு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது 
 
இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
அதன்பின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது இரண்டு சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதாகவும் இதனால் விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்