வங்கக்கடலில் புயல்: தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு?

வியாழன், 11 மே 2023 (12:13 IST)
வங்க கடலில் புயல் உருவானதை இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்ததை அடுத்து தற்போது தமிழகத்தில் உள்ள 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னாள் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தோன்றியதை அடுத்து அது தாழ்வு மண்டலமாக உருவாகி தற்போது புயலாக வலுவடைந்துள்ளது.

இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. இந்த புயலால் தமிழ்நாட்டுக்கு எந்த ஆபத்தும் பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டாலும் ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘வங்கக்கடலில் 'மோக்கா புயல்' உருவானதை குறிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்