அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக உருவெடுக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி

சனி, 11 செப்டம்பர் 2021 (10:42 IST)
வங்கக் கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் புயல் சின்னமாக உருவெடுக்கும் என தகவல்.
 
 
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெப்பசலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக தொடர்ந்து பல இடங்களில் மழை பெய்து வந்தது. இந்நிலையில் வங்க கடலில் வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு பகுதியை ஒட்டி காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. 
 
இந்த காற்றழுத்தம் மேற்கு,  வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் ஒடிசா, பஞ்சாப் ,சத்தீஸ்கர், டெல்லி, மேற்கு வங்கம் , ஆந்திராவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்