வங்கி மோசடி: சைபர் க்ரைம் காவல்நிலையத்தின் முக்கிய எச்சரிக்கை!

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (21:17 IST)
வங்கி மோசடியில் ஈடுபட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும் இந்த மோசடியின் மூலம் பணத்தை இழந்து வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்பதையும் அவ்வப்போது பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் இதுகுறித்து முக்கிய எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர், இந்த செய்தியில் கூறியிருப்பதாவது: ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக தங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்ட உடனே பதட்டமடைய வேண்டாம். உடனடியாக 155260 என்ற எண்ணுக்கு அழையுங்கள். தங்களது வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்கள் வங்கி கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் வெளியே எடுக்காதவாறு ஃபிரீஸ் செய்யப்படும்
 
மோசடி நடந்தது 24 மணி நேரத்திற்குள் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். மேலும் ஏதேனும் சைபர் குற்றங்கள் சம்பந்தமாக காவல் நிலையத்திற்கு நேரில் வராமலேயே புகார் அளிக்க www.cybercrime.gov.in என்ற வலைதளத்தில் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
எனவே வங்கி தொடர்பாக மோசடி ஏதேனும் நடந்தால் உடனடியாக 155260 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்