சேலத்தில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக அரசு தேர்தல் ஆணையத்தை தனது கிளைக் கழகமாக மாற்றிவிட்டதாக கடுமையாக விமர்சித்தார். "சாவி கொடுத்தால் ஆடும் பொம்மையாக தேர்தல் ஆணையத்தை பாஜக அரசு மாற்றியுள்ளது" என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
ஜனநாயகத்தின் அடிப்படையே கேலிக்கூத்தாகிவிட்டது என்றும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கவலை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் சிறை தியாகிகள் நினைவாக விரைவில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும், அதற்கான பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும், தற்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் "அடிமைத்தனம்" குறித்து பேச அவருக்கு என்ன உரிமை உள்ளது என்றும் முதல்வர் கேள்வி எழுப்பினார். “நமது ஒற்றுமைதான் பலரது கண்ணை உறுத்துகிறது” என்று குறிப்பிட்ட அவர், திராவிட முன்னேற்றக் கழகமும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து செயல்படுவதை வலியுறுத்தினார்.