சென்னை இளைஞரின் அசத்தல் திட்டம்: கூகுள் குரோம் பிரவுசரை வாங்க ரூ.2.9 லட்சம் கோடி ஆஃபர்!

Siva

ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2025 (08:16 IST)
சென்னையை சேர்ந்த அரவிந்த் ஸ்ரீனிவாஸ் என்பவர், கூகுள் நிறுவனத்தின் குரோம் பிரவுசரை ரூ.2.9 லட்சம் கோடிக்கு  வாங்க முன்வந்துள்ளார். அமெரிக்க நீதிமன்றம் கூகுள் மீது விதித்த கட்டுப்பாடுகளுக்கு பிறகு இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவரான இவர், அமெரிக்காவின் பெர்க்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி பட்டம் பெற்றவர். ஓபன்ஏஐ மற்றும் கூகுள் பிரெய்ன் போன்ற முன்னணி AI நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
 
2022-ல் பெர்பிளெக்சிட்டி ஏஐ என்ற தனது சொந்த AI நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் முதலீடு செய்துள்ளார்.
 
அமெரிக்க நீதிமன்றம் கூகுள் நிறுவனம் குரோம் பிரவுசரை பல சாதனங்களில் முன்பே நிறுவி, சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாக தீர்ப்பளித்தது. இதனால், கூகுள் தனது சில தயாரிப்புகளை விற்க நேரிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தியே அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்த பிரமாண்டமான திட்டத்தை முன்வைத்துள்ளார்.
 
சென்னை இளைஞர் கையில் கூகுள் குரோம் பிரவுசர் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்