உலகம் முழுவதும் பல நாடுகளிலும் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு கடுமையான தண்டனைகளும், சட்டத்திட்டங்களும் உள்ளன. ஒவ்வொரு நாடும் இந்த விஷயத்தில் ஒவ்விரு வகையான சட்டத்தை பின்பற்றி வருகின்றன.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டத்தை மேம்படுத்துவது குறித்த விவாதம் எழுந்துள்ளது. தற்போதுவரை தான் பாலியல் ரீதியாக தொல்லைக்கு உள்ளானதாக ஒருவர் வழக்கு தொடர்ந்தால் அல்லது தொல்லைக்கு உள்ளாகும்போது எதிர்ப்பு தெரிவித்திருந்தால் மட்டுமே அது பாலியல் குற்றமாக கருதப்படும் என்ற நிலை உள்ளது.
ஆனால் ஒருவர் விருப்பமின்றி அவரிடம் பாலியல் ரீதியாக நடந்து கொள்ளும்போது அவர் எதிர்ப்பு தெரிவித்திருக்காவிட்டாலும், அவருக்கு விருப்பமில்லை என்னும் பட்சத்தில் அது பாலியல் குற்றமாகவே கருதப்படும் என விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்த சட்டம் பல குளறுபடிகளை ஏற்படுத்தும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.