இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி யில் நானும் படித்தவன் தான் என கூறி இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "கடந்த இரண்டு தினங்களாக என்னால் சரியாக தூங்க முடியவில்லை. அந்தப் பள்ளியின் பழைய மாணவனாக மட்டும் அல்லாமல் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக இருக்கும் என்னால் இந்த செய்தியை ஜீரணிக்க முடியவில்லை.