தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலாகவே பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே கல்வி பயின்று வருகின்றனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு கொரோனா பரவியதால் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் பத்மா சேஷாத்ரி பள்ளியில் ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியின் மீது பழைய மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் என இப்போது அடுக்கடுக்காக புகார்களைக் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் மூத்த நடிகையான குட்டி பத்மினி சில ஆண்டுகளுக்கு முன்னர் அப்பள்ளியை குறித்து அளித்த புகார் இப்போது வைரலாக பரவி வருகிறது. அந்த குற்றச்சாட்டில் அவர் என் மகளுக்கு அவர்கள் இலவசமாக் சீட் கொடுத்தார்கள். ஆனால் கொஞ்ச நாள் கழித்து என்னை அழைத்து வருமான வரித்துறையில் எங்கள் நிறுவனம் நிலம் வாங்கியது சம்மந்தமாக சில பிரச்சனைகள் உள்ளன. அதை தீர்க்க, நீங்கள் வருமான வரித்துறை அதிகாரியிடம் எங்களுக்கு உதவ முடியுமா? எனக் கேட்டனர். அப்போதுதான் அவர்கள் இதற்காகதான் நமக்கு இலவசமாக சீட் கொடுத்தார்களோ என்ற சந்தேகம் வந்தது எனக் கூறியுள்ளார். நடிகை குட்டி பத்மினி வருமான வரித்துறை விழிப்புணர்வு சம்மந்தமாக நிறைய விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.