மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் அதற்கெதிரான போராட்டங்கள் நடக்க ஆரம்பித்தன. தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் தமிழக அரசு நீட் தேர்வை தடுக்க தவறியது. இதனால் தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் ‘தேர்வுகள் நெருங்கியுள்ள நிலையில் மாணவர்கள் பிழை திருத்தத்துக்காகக் அலைந்து கொண்டிருப்பது அவர்களுக்கு சிரமத்தையைக் கொடுக்கும். இதனால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் தமிழக மாணவர்கள் அதிகளவில் தோல்வி அடைவதற்கான வாய்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்த குளறுபடிகளை உண்டாக்கி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடும் மத்திய அரசு நிறுத்தி தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக மாணவர்களும், பெற்றோர்களும், அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், அமைப்புகளும் ஒன்றுபட்டுக் குரலெழுப்ப வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.