ஊமைப் படமானது கமலின் டி.வி. உடைக்கும் பிரச்சாரம் !

திங்கள், 15 ஏப்ரல் 2019 (16:05 IST)
கமலின் பிரச்சாரப்படத்தில் உள்ள வசனங்களை நீக்க சொன்ன தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு மக்கள் நீதி மய்யம் பணிந்துள்ளது.

விட்டரில் கமல் தனது தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் மிகவும் ஆவேசமாகப் பேசியுள்ள கமல் தமிழக அரசியல் தலைவர்களின் பிரச்சாரத்தைக் கேட்டி கோபமாகி டிவியை உடைப்பது போல பேசியிருந்தார். இந்த வீடியோ வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. அதற்கு பல திசைகளில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தன. 

இதையடுத்து தேர்தல் ஆணையம் இந்த விளம்பரத்தில் உள்ள சில வசனங்களை ஒலி நீக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யத்திற்கு உத்தரவிட்டது. அதற்கு கமல் பணிந்து வசனங்களை நீக்கியுள்ளார். இது குறித்து கமல் தனத் டிவிட்டரில் தெரிவித்துள்ள செய்தியில் ‘தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி எங்கள் கட்சியின் பிரச்சாரப் பட வீடியோவில் பல வார்த்தைகளை ஒலி நீக்கி சில இடங்களில் ஊமைப்படமாக ஆக்க சம்மதிக்கிறது மக்கள் நீதி மய்யம். நடைமுறை சட்டங்களை என்றும் மதிக்கவே முனையும். நாளை நாங்கள் ஆளுங்கட்சியானாலும் இதே  மாண்பு  தொடரும். தேர்தல் ஆணையம் இடையூறின்றி சுதந்திரமாய் இயங்க  விடுவோம். இன்று ஆள்வோருக்கு  அந்த மாண்பு இல்லாதது இந்தியாவின்  சோகம். அது விரைவில் நீங்க வாழ்த்துக்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்