ரேஷன் கடைகளில் திமுக சின்னம் வைக்கக் கூடாது… நீதிமன்றம் கறார்!

செவ்வாய், 25 மே 2021 (07:34 IST)
கொரோனா நிவாரண தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் ரேஷன் கடைகளுக்கு அருகே திமுக சின்னம் பொறிக்கப்பட்ட பேனர்கள் வைக்கப்படுவது குறித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா கால நிவாரண தொகையாக பதவியேற்றுள்ள திமுக அரசு, முதல் கட்டமாக 2000 ரூபாய் வழங்கியுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக 2000 ரூபாய் ஜூன் 3 ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிவாரணத் தொகை வழங்கும் கடையில் திமுக சின்னம் மற்றும் தலைவர்கள் புகைப்படம் இருக்கும் பேனர்கள் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இது சம்மந்தமாக அதிமுகவைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘மக்களால் தேர்ந்தெடுத்த முதல்வரின் புகைப்படம் கடைகளுக்கு அருகே வைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் ஆளும் கட்சியின் சின்னம் இருக்கக் கூடாது. நிவாரணம் வழங்குவது அரசியல் நிகழ்ச்சியாக மாறக்கூடாது’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்