சசிகலாவுக்கு எதிராக வழக்கு ஏன்? நீதிமன்றத்தின் கண்டிப்பால் மனுவை வாபஸ் பெற்ற கே.பி.பழனிசாமி

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (20:56 IST)
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரி முன்னாள் எம்பியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான கே.பி,பழனிச்சாமி இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்




இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் ஏன் பொதுநல வழக்கு தொடர்கிறீர்கள் என்று மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனத்துடன் கேள்வி எழுப்பினார்.

உயர்நீதிமன்ற நீதிபதியின் கண்டிப்பை அடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கே.பி,பழனிச்சாமி தெரிவித்ததால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது

ஏற்கனவே தேர்தல் கமிஷன் இதுகுறித்து விளக்கம் கேட்டிருக்கும் நிலையில் இந்த வழக்கு தேவையற்றது என்று. அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறினர். இந்நிலையில் இன்று சசிகலா தரப்பில் இருந்து தேர்தல் கமிஷனுக்கு அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்