பிரதமரின் வருகையையொட்டி சென்னை முதல் மகாபலிபுரம் வரை பேனர்கள் வைக்க தமிழக அரசு அனுமதி வாங்கியிருக்கும் நிலையில், ‘தமிழக அரசு பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும்’ என அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த விவகாரத்திற்கு பிறகு அனைத்து கட்சிகளும் பேனர் இனிமேல் வைப்பதில்லை என அறிவித்தன. ஆளும்கட்சியான அதிமுகவும் பேனர் இனி வைப்பதில்லை என அறிவித்தது. அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாத காலம் கூட முடியாத சூழலில் பிரதமர் மோடி – சீன அதிபர் சந்திப்புக்கு பேனர்கள் வைக்க நீதிமன்றத்திடம் அனுமதி வாங்கியிருக்கிறது தமிழக அரசு. இது மக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.