மாரிதாஸ் சேனலின் வீடியோக்களை நீக்கவேண்டும் – நீதிமன்றம் உத்தரவு!

புதன், 29 ஜூலை 2020 (16:19 IST)
நியுஸ் 18 சேனல் தொடர்பாக வெளியிட்ட வீடியோக்களை நீக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யூட்யூபில் அரசியல் சார்பான வீடியோக்கள் வெளியிடுவதில் பிரபலமானவர் மாரிதாஸ். பாஜக ஆதரவாளரான இவர் நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டை பெற்றவர். சமீபத்தில் ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக தனியார் செய்தி தொலைக்காட்சியில் புகார் அளித்திருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். பிறகு அந்த தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனரிடம் இருந்து தனக்கு பதில் வந்திருப்பதாக மற்றொரு மெயிலை வைத்து வீடியோவும் வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த இ-மெயிலை தான் அனுப்பவில்லை என தெரிவித்துள்ள தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர், தனது பெயரை பயன்படுத்தி தவறான தகவல்களை பரப்புவதாக மாரிதாஸ் மீது புகார் அளித்துள்ளார். இதனால் சென்னை சைபர் க்ரைம் போலீஸார் யூட்யூப் மாரிதாஸ் மீது இணையவழி மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் மாரிதாஸ் மீது அவதூறு பரப்பியதாக 1.5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நியூஸ் 18 தமிழ்நாடு ஆசிரியர் குணசேகரன் மற்றும் நியூஸ் 18 குழுமம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நியூஸ் 18 சேனல் பற்றி செய்தி வெளியிட மாரிதாஸுக்கு தடை விதித்தார். மேலும் அவர் இதுவரை வெளியிட்ட நான்கு வீடியோக்களையும் உடனடியாக சமூகவலைதளங்களில் இருந்து நீக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஆகஸ்ட் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்