பஞ்சமி நில அபகரிப்பு சர்ச்சை! எல்.முருகன் நேரில் ஆஜராக உத்தரவு!
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (17:44 IST)
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டதாக எல்.முருகன் கூறியது மீதான புகார் வழக்கில் ஆஜராக எல்.முருகனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக இருந்தபோது எல்.முருகன், முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை எல்.முருகன் மீது வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு தொடர்ந்து வந்த நிலையில் எல்.முருகன் மத்திய இணை அமைச்சர் ஆனார். இந்நிலையில் தற்போது இந்த வழக்கில் எல்.முருகன் நேரில் ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.