தினகரனுக்கு வெற்றி ; குக்கர் சின்னம் அவருக்கே : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வெள்ளி, 9 மார்ச் 2018 (10:47 IST)
டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமீபத்தில் நடந்த ஆர்.கே.நகர் தொகுதியில் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார் டிடிவி தினகரன்.எனவே செண்டிமெண்டாக தனக்கு குக்கர் சின்னத்தையே அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்த அனுமதிக்குமாறு தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 
 
சுயேட்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்ற நிலையில் டெல்லி ஐகோர்ட்டின் தீர்ப்பு தினகரனுக்கு சாதகமாக வருமா என எதிர்பார்க்கப்பட்டது.
 
இந்நிலையில், டிடிவி தினகரன் அணிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு  நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது தினகரன் தரப்பிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
 
எனவே, உள்ளாட்சி தேர்தலில் தினகரன் அணியினர் குக்கர் சின்னத்திலேயே போட்டியிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்