நகைக்காக சசிகலா படுகொலை - கணவர், மனைவி கைது

திங்கள், 3 ஏப்ரல் 2017 (16:42 IST)
சசிகலா என்ற குடும்ப பெண் நகைக்காக கொலை செய்யப்பட்ட விவகாரம் கன்னியாகுமரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சசிகலா(36) என்ற பெண், கடந்த 25ம் தேதி தோழியை சந்திக்க செல்வதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. எனவே அவரது கணவர் போலீசாரிடம் புகார் அளித்தார். 
 
போலீசாரின் விசாரணையில், கலா என்பவரின் வீட்டிற்கு அவர் சென்றது தெரிய வர, கலா மற்றும் அவரது கணவர் முருகேசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, பல திடுக்கிடும் தகவல் வெளியாகியது. 
 
கலாவும், முருகேசனும் அந்த பகுதியில் வசிக்கும் சில குடும்ப பெண்களிடம் பணத்தாசை காட்டி மயக்கி விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். அதன் படி கடந்த 25ம் தேதி ஒரு கஸ்டமருக்காக சசிகலாவை வரவழைத்துள்ளனர். 
 
அதன் பின், தங்களின் மருத்து செலவிற்காக சசிகலா அணிந்துள்ள நகைகளை கேட்டுள்ளனர். ஆனால், அதற்கு சசிகலா மறுப்பு தெரிவிக்கவே, கோபத்தில் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்து, நகைகளை பறித்துக் கொண்டு, அவரது உடலை வீட்டின் பின் புறம் குழி தோண்டி புதைத்து விட்டனர். 
 
அதன்பின் போலீசாரிடம் மாட்டிக்கொள்வோம் என்கிற பயத்தில், அவரது சடலத்தை அங்கிருந்து வெளியே எடுத்து சென்று, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் புதைத்தது தெரிய வந்தது. அவர்களின் வாக்குமூலத்தையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்