கலை, அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு: இன்று முதல் தொடக்கம்

திங்கள், 29 மே 2023 (11:52 IST)
தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கும் என உயர் கல்வித் துறை தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடம் இருக்கும் நிலையில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். எனவே அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு அவர்கள் கேட்ட பாடப்பிரிவுகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இன்று முதல் கலந்தாய்வு தொடங்க இருப்பதாகவும் மாணவ மாணவிகள் இதில் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு கலந்தாய்வு இன்று முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதன் பிறகு ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதல் கட்ட கலந்தாய்வும், ஜூன் 12 முதல் 20 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும். 
 
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஜூன் 22 ஆம் தேதி கல்லூரி வகுப்புகள் தொடங்கும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்