தடையை மீறி கடையை திறந்த வியாபாரிகள்: தி.நகரில் பரபரப்பு

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (17:54 IST)
சென்னையில் மக்கள் அதிகமாகக் கூடும் 9 இடங்களில் வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் செயல்பட்டால் நேற்று முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில் சென்னையின் முக்கிய பகுதியான தி.நகர் சாலை முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டது 
 
இந்த நிலையில் திநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள பிரபலமான துணிக்கடை ஒன்றில் கடை ஊழியர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறை மற்றும் மாநகராட்சியின் அதிகாரிகள் உடனடியாக வந்து கடையை மூட உத்தரவிட்டனர். மேலும் இந்த உத்தரவை மீறி கடையைத் திறந்தால் ரூபாய் 50,000 முதல் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்து இருப்பது மட்டுமல்லாமல் கடையை பூட்டி சீல் வைக்கப்படும் என எச்சரித்தனர்
 
இந்த நிலையில் தி.நகர் வியாபாரிகள் கடையை மூடி வெளியே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்