கொரோனா தடுப்பு நடவடிக்கை ...நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்

ஞாயிறு, 29 மார்ச் 2020 (12:27 IST)
கொரோனா தடுப்பு நடவடிக்கை ...நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள்

கொரோனா வைரஸால் உலகில் 660706 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 139 415 பேர் குணமடைந்துள்ளனர். 30652 பேர் உயிரிழந்துள்ளனர்.  இந்தியாவில் 979 பேர் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.  87 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்  மொத்தம் 42 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை தடுக்க தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடிகர் விஜய் வீட்டில் சுகாதாரத்துரை அதிகாரிகள் விசாரித்துச் சென்றனர்.

மேலும், வெளிநாடுகளுக்குச் சமீபத்தி சென்ற பிரபலங்களின் பட்டியலில்,  நடிகர் விஜய், பிரபுதேவா, நடிகைகள் சிலர்,என நட்சத்திரங்கள் இப்பட்டியலில் இடம்பெற்றதாக தெரிகிறது. அதனால், நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டிற்கு அதிகாரிகள் சென்று விசாரித்துள்ளனர்.

அங்கு கடந்த 6 மாதங்களாக வெளிநாடு எங்கும் செல்லவில்லை என வீட்டில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இதையெடுத்து,  விஜய் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற நோட்டீஸை ஒட்டவில்லை. கிருமி நாசினியை வீட்டிற்கு அருகில் தெளித்துவிட்டுச் சென்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்