ஒரு நாளில் 12,000 பேருக்கு கொரோனா: தமிழகத்தில் இப்படியும் செய்தி வரும்...

சனி, 25 ஜூலை 2020 (08:51 IST)
ஒரு நாளின் பாதிப்பு எண்ணிக்கை 10,000 - 12,000 என செய்தி வருவதற்கு கூட வாய்ப்புள்ளது என தகவல். 

 
நேற்று தமிழகத்தில் 6,785 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 199,749 ஆக உயர்ந்துள்ளது.  
 
மேலும் கொரோனாவால் பாதிப்பு அடைந்த 6,785 பேர்களில் 1,299 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 92,206 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் தமிழகத்தில் நேற்று கொரோனாவுக்கு 88 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது.  அதோடு தமிழகத்தில் 6,504 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர்.  
 
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக என்றும் இல்லாத வகையில் கொரோனா 6,000 -  7,000 என பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இது சகஜம் தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஏனெனில் பொதுவாக எந்த நோயாக இருந்தாலும் 60 - 70% பேரை பாதித்து அதன் பின்னரே படிப்படியாக குறையும். அப்படி பார்க்கையில் ஒரு நாளின் பாதிப்பு எண்ணிக்கை 10,000 - 12,000 என செய்தி வருவதற்கு கூட வாய்ப்புள்ளது. 
 
ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம் என்னவென்றால் பாதிப்பு எண்ணிக்கையைவிட் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பது தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்