28 யானைகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்தாச்சு...

புதன், 9 ஜூன் 2021 (10:28 IST)
முதுமலை டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

 
சமீபத்தில் வண்டலூர் பூங்காவில் இருக்கும் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது என்பதும் தெரிந்ததே. இதனையடுத்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
முதுமலை டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழு விரைந்தது. அங்கு 28 யானைகளுக்கும் கோரோனோ பரிசோதனைக்காக சளி மாதிரிகள் சேகரிக்கும் பணி நடந்தது. யானைகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் இசாட்நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளது.
 
முதுமலை டாப்சிலிப் முகாமில் 2 குட்டி யானைகள், 5 கும்கி யானைகள் உட்பட 28 வளர்ப்பு யானைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் முன்னுரிமை அடிப்படையில் பாகன்கள் உள்ளிட்ட 52 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்