15 நிமிடத்தில் கொரோனா டெஸ்ட் செய்யலாம்! – ”கோவிசெல்ஃப்” கருவியை பயன்படுத்துவது எப்படி?

வெள்ளி, 21 மே 2021 (11:33 IST)
இந்தியா முழுவதும் கொரோனா சுயபரிசோதனை செய்து கொள்ள கோவிசெல்ப் கருவிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க கோவிசெல்ஃப் என்ற சுய கொரோனா பரிசோதனை கருவிக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது.

இந்த கோவிசெல்ஃப் பரிசோதனை கருவியில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் கோவிசெல்ப் செயலி மூலம் ஐசிஎம்ஆர் தளத்தில் சேமிக்கப்படும். இந்த கோவிசெல்ப் கருவியின் விலை 450 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் இந்த கருவி மூலம் சோதனை செய்து கொள்ளலாம். கொரோனா ஆரம்பகட்ட பாதிப்புகள் இந்த கருவியில் காட்டாமல் போக வாய்ப்பிருப்பதால் கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் இந்த கருவியில் நெகட்டிவ் என காட்டினாலும் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

சோதனைகளை மேற்கொள்ள முதலில் கோவிசெல்ப் ஆண்ட்ராய்டு செயலியை தரவிறக்கி மொபைல் எண், பெயர் உள்ளிட்ட தகவல்களை அளித்து லாக் இன் செய்ய வேண்டும். பின்னர் அதில் கூறப்பட்டுள்ள வழிகாட்டுதலின் படி கோவிசெல்ப் கருவியை மூக்கில் வைத்து சோதனை மேற்கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இப்படியாக 15 நிமிடங்களுக்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு முடிவை தெரிந்து கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்