சமீபத்தில் வண்டலூர் பூங்காவில் இருக்கும் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதில் ஒரு சிங்கம் கொரோனாவால் உயிரிழந்தது என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து இன்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வண்டலூர் பூங்காவுக்கு நேரில் ஆய்வு செய்தார் என்பதும் சிங்கங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் வண்டலூர் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதுமலை டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மருத்துவ குழு ஒன்று நாளை உதகை செல்ல இருப்பதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார்