தமிழகத்தில் இன்று மேலும் 1,236 பேருக்கு கொரோனா உறுதி ! 13 பேர் பலி

செவ்வாய், 8 டிசம்பர் 2020 (20:40 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1,236 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு என்பது 7,92,788 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1330 ஆகும். இதனால் மொத்தமாகக் குணமடைந்தோர் எண்ணிக்கை 7,70,378 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 13 ஆகும். இதுவரை மொத்தம் 11,822 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் 333 பேருக்கு கொரோனா பாதிப்பு உருவாகியுள்ளது. இதுவரை மொத்த எண்ணிக்கை 218198 ஆக அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்