இந்தோனேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் தொடங்கி இந்தியாவிலும் கொரோனா மீண்டும் பரவியுள்ள நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.
2020ம் ஆண்டில் சீனாவிலிருந்து பரவிய கோவிட் என்னும் பெருந்தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி பல லட்சம் உயிர்களை பலி வாங்கியது. அதிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வர சில ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் புதிய வேரியண்ட் பரவத் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகிறது.
முக்கியமாக ஆசிய நாடுகளான நேபாளம், இந்தியா, வங்கதேசம், தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இந்த கொரோனா பரவல் கண்டறியப்பட்டிருந்தாலும், மிகக் குறைவாகவே பரவல் விகிதம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் “கொரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் அல்ல. அப்படி அரசு சார்பில் எந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை. தற்போது பரவியுள்ளது வீரியமற்ற கொரோனா என்பதால் பரவலை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K