சென்னையில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (07:05 IST)
சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது அடுத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
மேலும் சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று விடுத்த அறிக்கையில் சென்னை உள்பட 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின்படி நேற்று இரவு சென்னையில் மழை பெய்தது 
 
சென்னை திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மந்தைவெளி, அண்ணா சாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் 
 
அதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், அம்பத்தூர், ஆவடி ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் மழை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்