இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழக அரசு, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என்று அவர் கூறினார்.
திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், தமிழகத்தில் மட்டும் சாமர்த்தியமாக பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்தாமல் தவிர்த்துள்ளது. அகில இந்திய அளவில் ஏழு மாநிலங்கள் பழைய ஓய்வு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.
கடந்த 12 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை, காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. ஆட்சி முடியும் தருவாயில், 40 ஆயிரம் பேரை நியமிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி வைத்திருந்த அரசு ஊழியர்களின் ஓட்டு வங்கியை, ஸ்டாலின் இழந்துவிட்டார் என்று அவர் தெரிவித்ததால், இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.