சென்னையில் திடீரென உயர்ந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

திங்கள், 5 அக்டோபர் 2020 (16:38 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது என்பதும், கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் ஊரடங்கு தளர்வு அதிக அளவில் அறிவிக்கப்பட்ட பின்னரும் சென்னையிலும் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாமலும் அதிகமாகாமலும், தினமும் சுமார் 5000 பேர் பாதிப்பு என்ற அளவில் உள்ளது
 
இந்த நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட தகுதிகள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. நேற்று வரை 10 இடங்கள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக இருந்த நிலையில் திடீரென இன்று அது 36 ஆக உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை மாநகராட்சி இதற்கு முன் அறிவித்த தகவலின்படி சென்னையில் கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த 36 இடங்கள் கட்டுப்படுத்த பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சென்னையில் கொரனோ வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை அளித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்