மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? சென்னை மாநகராட்சி தகவல்!

திங்கள், 5 அக்டோபர் 2020 (12:54 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது 
 
பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் ஓடத் தொடங்கியதை அடுத்து இன்று முதல் மின்சார ரயில்கள் ஓடத் தொடங்கி உள்ளன. திரையரங்குகள். பள்ளி கல்லூரிகள் மட்டும் திறந்து விட்டால் முழுக்க முழுக்க இயல்பு நிலை திரும்பி விடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் பல்வேறு சுற்றுலாத் தலங்கள் அவ்வப்போது திறந்து கொண்டிருக்கும் நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு மட்டும் இன்னும் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது 
 
இந்த நிலையில் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது என்பது குறித்து அரசு தனது முடிவை தெளிவாக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து அக்டோபர் 31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனை இம்மாதம் 31ம் தேதி வரை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல முடியாது என்பது உறுதியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்