இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை தமிழ்நாடு அரசு வழங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள், மக்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட அனைவரும் இலங்கை தமிழர்களுக்கு உதவ நிதியளிக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு உதவ ரூ.80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி அனுப்பும் முதல்வரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது என அவர் கூறியுள்ளார்.