இதனையடுத்து அந்த கம்பார்ட்மெண்டில் பயணம் செய்த கேரள வாலிபர் சுத்தம் இல்லாத கழிவறையை செல்போனில் புகைப்படம் எடுத்து, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலின் ட்விட்டர் பக்கத்தில், இரவு 8:00 மணியளவில் தனது புகாரை பதிவு செய்தார். சுமார் 9:00 மணிக்கு ரயில் திருநெல்வேலி சந்திப்பு வந்தடைந்தது. அங்கிருந்த துப்புரவு பணியாளர்கள் ஓடிவந்து கழிவறையை சுத்தம் செய்தனர். இதனால் பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.